போக்குவரத்தை சீர் செய்த காவலர் லாரி மோதி பலி!

போக்குவரத்தை சீர் செய்த காவலர் லாரி மோதி பலி!

போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த லாரி மோதியதில் போக்குவரத்து காவலர் பலியானார்.
Published on

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் முத்துக்குமரன் (45). இவர் ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் சாலை இனையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் போது பின்னால் கலவை இயந்திரத்தை இழுத்து வந்த 407 கூண்டு வண்டி மோதியதில் முன்னாள் சென்ற கண்டைனர் லாரி என இரு வண்டிகளுக்கிடையே சிக்கி வலது கால் முழுவதுமாக முறிந்தது.

போக்குவரத்தை சீர் செய்த காவலர் லாரி மோதி பலி!
ஆலங்குளத்தில் குருத்தோலை பவனி!

உடனே அவரை மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், செல்லும் வழியிலே அவர் பலியானார்.

தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து காவலர் முத்துக்குமரன் உடல் வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் போது லாரி மோதி போக்குவரத்து காவலர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சக காவலர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com