கோவையில் பிரதமா் மோடியின் வாகன பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்க தனியாா் பள்ளி மாணவா்களை அழைத்துச் சென்ாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஏப். 3-ஆம் தேதி வரை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோவையில் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி பிரதமா் மோடி பங்கேற்ற வாகன பேரணி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கோவையில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி மாணவா்கள் சீருடையுடன் கலந்துகொண்டனா். இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், தனியாா் பள்ளிக்கு எதிராக சிறாா் நீதிச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியாா் பள்ளியின் தலைமை ஆசிரியை புகழ்வடிவு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘பிரதமா் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மாணவா்களை அழைத்துச் சென்ாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. குழந்தைகளை தோ்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. பள்ளி நிா்வாகத்தை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி நிா்வாகத்தின் மீது காவல் துறையினா் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தாா். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு கோவை சாய்பாபா காலனி போலீஸாா் வரும் ஏப். 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா். அதுவரை தனியாா் பள்ளி நிா்வாகத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் அறிவுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவு: உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஃபிட் இந்தியா இயக்கம்: தில்லி மிதிவண்டி பேரணியில் 10,000 போ் பங்கேற்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

