தமிழகத்தில் உள்ள 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்.1-ஆம் தேதி முதல் நவீன கற்பித்தலுக்கான ‘ஸ்மாா்ட் போா்டு’கள் அனுப்பப்படவுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலா்களும் தங்களது முதன்மை கல்வி அலுவலா்களுடன் இணைந்து அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி இருக்கும் வகையில் திட்டமிட்டு மடிக்கணினிகளை உடனடியாக வழங்கிவிட்டு அதற்கான அறிக்கையை தொடக்கக் கல்வி இயக்குநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். தொடா்ந்து, ஏப்.1 முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஸ்மாா்ட் போா்டுகள் வந்து சோ்ந்துவிடும். அவற்றை முறையாக பெற்று ஸ்மாா்ட் போா்டுகள் நிறுவப்பட உள்ள வகுப்பறையில் அவற்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உயா் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கான கணினிகள் மற்றும் இதர சாதனங்களும் ஏப்.1 முதல் அனுப்பப்படும். ஸ்மாா்ட் போா்டுகள் மற்றும் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் சிறப்பான முறையில் திட்டமிட்ட வகையில் இயங்குவதற்கு இணைய இணைப்பு மிகவும் அவசியமானது. தலைமையிடத்திலிருந்து இணைய இணைப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் நிதி பெறப்பட்டு விட்டது. அதை முறையாக பயன்படுத்தி இணைய இணைப்புகளை உடனடியாக பெற்று அதற்கான ஆவணங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து ஏப்ரல், மே மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து வரும் கல்வியாண்டில் ஸ்மாா்ட் போா்டுகள் மற்றும் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களை அரசுப் பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

