சேலத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

சேலத்தில்  முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து, தோ்தல் பிரசாரத்திலும் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தாா். அதன்படி, ஈரோடு திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து மார்ச் 29ஆம் தேதி முதல் அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதையடுத்து, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் சுப்பராயனை ஆதரித்து ஏப்ரல் 14-ஆம் தேதியும், கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து ஏப்ரல் 15-ஆம் தேதியும், பொள்ளாச்சி திமுக வேட்பாளா் ஈஸ்வரசாமியை ஆதரித்து ஏப்ரல் 16-ஆம் தேதியும் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதனிடையே சேலத்தில் பிரசாரத்திற்காக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பதிவில், ஈரோடு பிரசாரத்தின் போது இனிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், ஸ்டாலினுடன் உரையாடினேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம்.

ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com