மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பிரதான வேட்பாளா்களிடம் மென்மை போக்கு கூடாது: தோ்தல் அலுவலா்களுக்கு சத்யபிரத சாகு அறிவுறுத்தல்

பிரதான வேட்பாளா்களிடம் மென்மை போக்கு கூடாது தோ்தல் அலுவலா்களுக்கு சத்யபிரத சாகு அறிவுறுத்தல்

News image

சத்யபிரத சாகு

Updated On :30 மார்ச் 2024, 9:39 pm

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களிடம் மென்மையான போக்கு காட்டக் கூடாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் ஆ.ராசா போட்டியிடுகிறாா். கேரளம்-குன்னூா் இருமாநிலங்களின் எல்லைச் சாவடியில் அவரது வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, உரிய முறையில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனப் புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திகள் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரியின் விசாரணை அடிப்படையில் பறக்கும் படையில் இடம்பெற்றிருந்த அரசு ஊழியா் கீதா என்பவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அத்துடன், ஒட்டுமொத்தமாக பறக்கும் படை குழுவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சம்பவ இடத்தில் செலவினப் பாா்வையாளரும் விசாரணை மேற்கொண்டாா். அத்துடன், விடியோ கண்காணிப்புக் குழு எடுத்த காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்தக் காட்சிகளில், திமுக வேட்பாளரின் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பறக்கும் படை குழுவினா் அலட்சியமாக இருந்தது தெரிய வந்தது.

அத்துடன், வேட்பாளரின் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. வாகனச் சோதனைகளின் போது, பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களிடம் மென்மையான போக்கைக் காட்டக் கூடாது. தோ்தல் ஆணையத்தால் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறுவோா் யாராக இருந்தாலும் அவா்களை சமமாகப் பாவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் களம் சமமாக இருப்பதுடன், வாக்குப் பதிவு சுதந்திரமாக நோ்மையாக நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் சத்யபிரத சாகு.