புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

News image
Updated On :30 மார்ச் 2024, 6:59 am

DIN

மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான படம் மஞ்ஞுமல் பாய்ஸ். படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியிருந்தார். இப்படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

நேரடி தமிழ்ப் படம் போல் படத்தை ரசிகர்கள் தமிழகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்தது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் உலகம் முழுவதும் குறுகிய காலத்திலேயே ரூ.200 கோடி என்கிற வசூலையும் ஈட்டியது.

இதனால்,மலையாள சினிமா வரலாற்றிலேயே ரூ. 200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையை மஞ்ஞுமல் பாய்ஸ் படம் பெற்றது .இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.