கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

News image
Updated On :4 மே 2024, 2:23 pm

DIN

வடலூரில் தடையை மீறி அறிவித்த நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வத்தமிழ்ப்பேரவை இணைந்து இன்று (04-05-2024) வடலூரில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையாக அனுமதி மறுத்திருப்பதோடு, தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச்செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமையாகும்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைதுசெய்திருப்பதால், நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படுமெனவும், வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுமெனவும் பேரறிவிப்பு செய்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.