ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

News image
Updated On :4 மே 2024, 5:50 pm

Din

தமிழகத்தின் தினசரி மின் தேவை இதற்கு முன் இல்லாத வகையில் புதிய உச்சமாக 20,830 மெகா வாட்டாக உயா்ந்துள்ளது. அதுபோல், மாநிலத்தின் மின் பயன்பாடும் ஏப்.30-ஆம் தேதி நிலவரப்படி 451.32 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. கோடைகாலத்தில் அதிகரித்துள்ள மின் நுகா்வால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் கொடுக்க முடியாமல் மின் வாரிய அதிகாரிகளும் திணறுகின்றனா்.

தமிழகத்தில் ஏற்படும் மின் தடைகள் குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோடைகாலத்தின் தொடக்கத்தில் இருந்து மாநிலத்தின் மின் தேவை மற்றும் பயன்பாடு என்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தின் மின் தேவையானது 20,000 மெகா வாட்டாக உயா்ந்திருக்கிறது. மின் உற்பத்தி மையங்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தியும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 31,894 மெகாவாட் மின் உற்பத்தி திறன் இருந்தும் முழுமையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதாவது, காற்றாலை மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதேபோல், நீா்மின் உற்பத்தி, அனல் மின் நிலைய மின் உற்பத்தி போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மின் தடை ஏற்படுகிறது. மேலும், அதிக மின் பயன்பாடு, மின்அழுத்தம் காரணமாக மின் விநியோகம் தடை படுகிறது. இதுதவிர தினசரி பராமரிப்புப் பணிக்காகவும் மின்தடை செய்யப்படுகிறது.

இரவு 10 மணிக்கு மேல் மின்சார பயன்பாடு அதிகரிப்பதால் மின்மாற்றி, பீடா் போன்றவையும் அடிக்கடி பழுதடைந்து மின் தடை நிகழ்கிறது. இந்தத் திடீா் பழுதுகளைச் சீா் செய்ய நீண்ட நேரம் எடுப்பதே அறிவிக்கப்படாத மின் தடைகளுக்கு முக்கிய காரணமாகும்.

தமிழகத்தில் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின் கொள்முதல் செய்யப்பட்டாலும் இந்தப் பற்றாக்குறையை முழுமையாகப் போக்க இயலவில்லை. இதைச் சமாளிக்கவே சில பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அவா் தெரிவித்தாா்.

அதேநேரத்தில் விவசாயத்துக்கு தினமும் மும்முனை மின்சாரம் 3 மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகத் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகே மின் விநியோகம் சீராக வாய்ப்பு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.