தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த போது குழந்தையை கொன்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் வினிஷா(24). கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு, செல்வமணி என்பவருடன் காதல் ஏற்பட்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.

ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்த அவருக்கு கடந்த 30 ஆம் தேதி கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் விடுதியில் அவர் தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, குழந்தையின் இரு கால்களையும் வெட்டி எடுத்து பிரசவம் பார்த்ததால் அந்த குழந்தை இறந்தது.

பின்னர் எழும்பூரில் உள்ள குழுந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது.

புகாரைத்தொடர்ந்து வினிஷா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வினிஷாவை நேற்றிரவு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com