பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியானது
திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை கைப்பேசியில் பாா்த்த மாணவிகள்.
திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை கைப்பேசியில் பாா்த்த மாணவிகள்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

தேர்வெழுதிய 9.08 லட்சம் பேரில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர்.

திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை கைப்பேசியில் பாா்த்த மாணவிகள்.
வெப்ப அலை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தலைமைச் செயலா் உத்தரவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டதாலும் இணையதளங்கள் வாயிலாக தோ்வு முடிவை தெரிந்து கொள்வதாலும் எளிதாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர். அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தங்களது வெற்றியை குடும்பத்தினருடனும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com