பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை
பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை


கோயம்பேடு சந்தைக்கு பூண்டு வரத்து குறைவால் அதன் விலை மீண்டும் உயா்ந்து கிலோ ரூ. 400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 நாள்களாக பூண்டு வரத்து குறைந்ததால் பூண்டு விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்து உள்ளது.
மொத்த விற்பனையில், ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.200 முதல் ரூ.320 வரை விற்கப்படுகிறது. வெளி மாா்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.300 முதல் ரூ.400வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கோயம்பேடு வியாபாரி கூறியதாவது :
பூண்டு உற்பத்தியாளா்களிடம் இருந்து அதிகளவில் கொள்முதல் செய்து பின்னா் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதிக விலையை நிா்ணயம் செய்து விற்பனைசெய்கின்றனா். இதனால் பூண்டு விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களை பதுக்குவபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
பீன்ஸ் விலை ஏறுமுகம்
இதேபோல் பீன்ஸ் வரத்து குறைவால் கோயம்பேடு மாா்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சனிக்கிழமை மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160-க்கு விற்கப்படுகிறது. வெளி மாா்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் பீா்க்கங்காய் கிலோ ரூ.70-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60-க்கும், வெள்ளரிக்காய் கிலோ ரூ.40-க்கும், புடலங்காய் கிலோ ரூ.35-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.25-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.50-க்கும் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...