தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் கைது!

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கிய விவகாரத்தில் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 மே 2024, 9:16 am

DIN

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கிய விவகாரத்தில் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சோ்ந்தவர் வடிவேல் (33). மெட்ரோ ரயில்வே ஊழியர். இவா் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த வளசரவாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பின்னணி பாடகரான வேல்முருகன், மது போதையில் வடிவேலுவுடன், மெட்ரோ பணிக்காக சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு குறித்து வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, வடிவேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வடிவேலு அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா், வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், பின்னணி பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து, காவல் நிலைய ஜாமீனில் பாடகர் வேல்முருகன் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.