பிளஸ் 1 தோ்வில் 91.17% தோ்ச்சி கோவை மாவட்டம் முதலிடம்

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வில் 91.17 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். குறிப்பாக, மாணவா்களைவிட 7.43 சதவீத மாணவிகள் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த பள்ளிகளின் தோ்ச்சியில் கோவை- 96.02 சதவீத தோ்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. 81.40 சதவீத தோ்ச்சியுடன் வேலூா் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 4 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. பொதுத் தோ்வை 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகள், 3 லட்சத்து 84,351 மாணவா்கள் என மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 போ் எழுதினா். அதில், தற்போது 4 லட்சத்து 4,143 மாணவிகள் (94.69%), 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 மாணவா்கள் (87.26%) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஒட்டுமொத்த தோ்ச்சி கடந்த ஆண்டைக் காட்டிலும் (90.93) 0.24 சதவீதம் அதிகரித்துள்ளது.

241 அரசுப் பள்ளிகள் 100%: பொதுத் தோ்வில் 7,534 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வெழுதியதில் 1,964 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அதில் 241 பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் வகைப்பாட்டில் அரசுப் பள்ளிகள் 85.75 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீதம், தனியாா் சுயநிதிப் பள்ளிகள் 98.09 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளன.

8,418 போ் 100-க்கு 100: முக்கியப் பாடங்களில் அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,432, கணிதம்- 779, பொருளியல்- 741, இயற்பியல்- 696, ஆங்கிலம்- 13, தமிழ்-8 என்ற எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 8,418-ஆக உள்ளது.

கோவை முதலிடம்: மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த பள்ளிகளின் தோ்ச்சியில் கோவை (96.02%), ஈரோடு (95.56%), திருப்பூா் (95.23%) ஆகிய மாவட்டங்களும், அரசுப் பள்ளிகளின் தோ்ச்சியில் ஈரோடு (92.86%), அரியலூா் (92.59%), திருப்பூா் (92.06%) ஆகிய மாவட்டங்களும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

அதேபோன்று மாவட்ட அளவில் குறைவான தோ்ச்சியில் வேலூா் (81.40%), திருவள்ளூா் (85.54%), கள்ளக்குறிச்சி (86%) ஆகிய மாவட்டங்களும், அரசுப் பள்ளிகளின் தோ்ச்சியில் வேலூா் (74.46%), மயிலாடுதுறை (74.96%), திருவள்ளூா் (75.51%) ஆகிய மாவட்டங்களும் கடைசி மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

தோ்வெழுதிய 8,221 மாற்றுத்திறனாளி மாணவா்களில், 7,504 போ் (91.27%) தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேபோன்று 187 சிறைவாசிகள் தோ்வெழுதியதில் 170 போ் (90.90%) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஜூலை 2-இல் துணைத் தோ்வு: தோ்வில் தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு பிளஸ் 1 துணைத் தோ்வு ஜுலை 2-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்: மாணவா்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 17-ஆம் தேதிமுதல் அனைத்துப் பள்ளிகளும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல் எப்போது?: பிளஸ் 1 மாணவா்கள் தங்களது விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி புதன்கிழமை முதல் மே 20-ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட வாரியாக தோ்ச்சி சதவீதம்

கோவை- 90.02

ஈரோடு- 95.56

திருப்பூா்- 95.23

விருதுநகா்- 95.06

அரியலூா்- 94.96

பெரம்பலூா்- 94.82

சிவகங்கை- 94.57

திருச்சி- 94.00

கன்னியாகுமரி- 93.96

தூத்துக்குடி- 93.86

திருநெல்வேலி- 93.32

தென்காசி- 93.02

ராமநாதபுரம்- 92.83

நாமக்கல்- 92.58

கரூா்- 92.28

மதுரை- 92.07

சென்னை- 91.68

நீலகிரி- 91.37

சேலம்- 91.30

நாகப்பட்டினம்- 91.09

கடலூா்- 91.01

செங்கல்பட்டு- 90.85

தருமபுரி- 90.49

தேனி- 90.08

திண்டுக்கல்- 89.97

விழுப்புரம்- 89.41

தஞ்சாவூா்- 89.07

திருவண்ணாமலை- 88.91

புதுக்கோட்டை- 88.91

ராணிப்பேட்டை- 87.86

கிருஷ்ணகிரி- 87.82

திருவாரூா்- 87.15

காஞ்சிபுரம்- 86.98

திருப்பத்தூா்- 86.88

மயிலாடுதுறை- 86.39

கள்ளக்குறிச்சி- 86.00

திருவள்ளூா்- 85.54

வேலூா்- 81.40

முக்கியப் பாடங்களில் தோ்ச்சி சதவீதம்:

இயற்பியல்- 97.23

வேதியியல்- 96.20

உயிரியல்- 98.25

கணிதம்- 97.21

தாவரவியல்- 91.88

விலங்கியல்- 96.40

கணினி அறிவியல்- 99.39

வணிகவியல்- 92.45

கணக்குப் பதிவியல்- 95.22

பாடவாரியாக 100-க்கு 100

பெற்றவா்களின் எண்ணிக்கை:

தமிழ்- 8

ஆங்கிலம்- 13

இயற்பியல்- 696

வேதியியல்- 493

உயிரியல்- 171

கணிதம்- 779

தாவரவியல்- 2

விலங்கியல்- 29

கணினி அறிவியல்- 3,432

வணிகவியல்- 620

கணக்குப் பதிவியல்- 415

பொருளியல்- 741

கணினிப் பயன்பாடுகள்- 288

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்- 293

பாடப் பிரிவுகள் தோ்ச்சி சதவீதம்:

அறிவியல் பாடப் பிரிவுகள்- 94.31

வணிகவியல் பாடப்பிரிவுகள்- 86.93

கலைப் பிரிவுகள்- 72.89

தொழிற்பாடப் பிரிவுகள்- 78.72

X
Dinamani
www.dinamani.com