எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று (மே.17) 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கோலாகலமாக தொடங்கியது.

News image
Updated On :17 மே 2024, 7:26 am

DIN

”மலைகளின் இளவரசி” என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று காலை 8 மணியளவில் 61 ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கியது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி,வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் தொடங்கி வைத்தனர்.

வரும் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு கிளி, நெருப்புக்கோழி,சேவல்,மயில்,கரடி போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்,தோட்டக்கலை மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், மீன் பிடித்தல் போட்டி,நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 2.50 லட்சம் மலர்ச் செடிகள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி உள்ளன.

மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு 75 ரூபாயும் 10 வயதுக்குக் கீழ் உள்ள சிறியவர்களுக்கு 35 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம்.

கடந்த ஆண்டைவிட நுழைவுக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.