நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

பற்பசை என்று நினைத்து எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

News image

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்.

Updated On :26 மே 2024, 6:08 am

DIN

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பி. கொட்டாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்( 33). அவருக்கு அனுஷ்கா (3), பாலமித்திரன் (2), ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு அவரது தங்கையான அறிவழகி குடும்பத்தினருடன் வந்துள்ளார்.

அறிவழகியின் மகள்கள் லாவண்யா (5), ராஷ்மிதா (2), அனுஷ்கா (3) மற்றும் பாலமித்திரன் (2), ஆகிய 4 குழந்தைகளும் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் மருந்தை, பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்தனர்.

அதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள விருதாச்சலம் அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிதம்பரம் போலீஸார் மற்றும் ஆலடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் வீட்டிலிருந்த எலி பேஸ்ட் மருந்து என தெரியாமல் சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.