நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு- 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன்


நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி எரிந்த நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா். இதை சந்தேக மரண பிரிவின் கீழ் உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினா்.
ஆனால், இந்த வழக்கில் தனிப்படையினா் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை டிஜிபி சங்கா் ஜிவால் கடந்த 23 ஆம் தேதி உத்தரவிட்டாா். இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கடிதத்தில் உள்ள நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...