தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

50 சதவீத தள்ளுபடி: ஈரோடு ஜவுளி கடைகளில் அதிகாலையே குவிந்த மக்கள்!

தீபாவளி மறுநாளான வெள்ளிக்கிழமை அனைத்து துணிவகைகளும் 50 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுவதால் ஈரோடு கடை வீதியில் அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர்.

News image
ஈரோடு ஆர்கேவி சாலையில் உள்ள துணிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடியில் துணிகளை வாங்குவதற்கு குவிந்த மக்கள்.
Updated On :1 நவம்பர் 2024, 3:21 am

DIN

ஈரோடு: தீபாவளி மறுநாளான வெள்ளிக்கிழமை அனைத்து துணிவகைகளும் 50 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுவதால் ஈரோடு கடை வீதியில் அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர்.

தீபாவளி விற்பனைக்காக ஈரோட்டில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளிலும் புதுப்புது விதமான ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்தனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு விற்பனையாகாத துணி வகைகளை ஸ்டாக் க்ளிரன்ஸ் செய்வதற்காக தீபாவளி மறுநாள் அனைத்து ஜவுளிக்கடைகளிலும் அனைத்து வகை துணிகளும் 50 சதவீதம் தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை(நவ.1) அதிகாலையில் ஆர்கேவி சாலையில் உள்ள துணிக்கடைகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதிகாலை 4 மணி முதல் ஜவுளி ரகங்களை வாங்க குவிந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை(நவ.1) அதிகாலையில் ஆர்கேவி சாலையில் உள்ள துணிக்கடைகளில்  அதிகாலையிலேயே துணிகளை வாங்க குவிந்த மக்கள்.

வெள்ளிக்கிழமை(நவ.1) அதிகாலையில் ஆர்கேவி சாலையில் உள்ள துணிக்கடைகளில் அதிகாலையிலேயே துணிகளை வாங்க குவிந்த மக்கள்.

அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால் ஈரோடு , கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் 50 சதவீத தள்ளுபடியுடன் கூடிய புதிய துணிகளை வாங்க குவிந்ததை அடுத்து அதிகாலை 3 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து முண்டியடித்துக் கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

புதிய துணிகள் தள்ளுபடியுடன் விற்பனை என்பதால் குறைந்த விலையில் அதிகளவு துணி வகைகளை எடுக்க முடியும் என்பதால் அதிகாலையில் வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.