4 நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறது 16-ஆவது நிதி ஆணையம்: முதல்வருடன் ஆலோசனை - கீழடி செல்லத் திட்டம்
தமிழ்நாட்டுக்கு 4 நாள்கள் பயணமாக, 16-ஆவது நிதி ஆணையம் வரவுள்ளது. நவ.17 முதல் 20-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனைகளையும் களஆய்வுப் பணிகளையும் நிதி ஆணையம் மேற்கொள்கிறது.









