டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் என்ஜின் கோளாறு!

சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் ஏற்பட்டக் கோளாறால் வேலைக்குச் செல்லும் பயணிகள் பலர் பாதிப்படைந்தனர்.

News image
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் பழுதாகி நின்ற விரைவு ரயில்.
Updated On :13 நவம்பர் 2024, 6:11 am

DIN

சென்னை சென்ட்ரல் − சென்னாப்பாளையம் செல்லக்கூடிய விரைவு ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் பழுதாகி நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர்.

பயணிகளை இறக்கிவிட்டு சென்ட்ரலில் இருந்து வடசென்னை எண்ணூர் யார்டை நோக்கி வரும் பொழுது விரைவு ரயில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ரயில் தண்டவாளத்திலேயே பழுதாகி நின்றது.

இந்த ரயில் கொருக்குப்பேட்டையில் பழுதாகி நின்றதால் இவ்வழியாகச் செல்லக்கூடிய மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், வேலைக்குச் செல்வோர் கால தாமதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் ரயில்வே ஊழியர்களால் என்ஜின் பிரச்னையானது சரிசெய்யப்பட்டு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.