கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: உதயநிதி வேண்டுகோள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க புதுமணத் தம்பதிக்கு உதயநிதி வேண்டுகோள்..

News image
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்- Din
Updated On :14 நவம்பர் 2024, 7:50 am

DIN

தூத்துக்குடி: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழா தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:

“சுயமரியாதை திருமணங்கள் திராவிட இயக்கங்கள் உருவானதால்தான் நடந்து வருகிறது. தமிழில் திருமணம், தமிழில் அர்ச்சனை என்பதெல்லாம் திராவிட இயக்கம் தோன்றியதால் தான் வந்தது.

கோயில் கருவறையில் கூட இன்றைக்கு தமிழ் ஓசை கேட்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தது திராவிட இயக்கத் தலைவர்கள்தான். தற்போது வரை பெண்களுக்குதான் மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களின் சுமையை போக்க குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என்று எண்ணற்ற திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தம்பதியர்களுக்கு ஒரு வேண்டுகோளாக நான் வைக்க விரும்புவது அழகான தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதுதான். அனைவரும் இதனை செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.