தொடர் மழை: இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?!

தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தொடர் மழை காரணமாக இன்று(நவம்பர்.20) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.20) விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மழை காரணமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்

தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com