தேனி: சபரிமலை சென்று திரும்பிய சிறுவன் பலி!

கார் கவிழ்ந்து விபத்தானதில் சிறுவன் பலி; 4 பேர் காயம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சபரிமலைக்கு சென்று திரும்பிய சிறுவன் கார் கவிழ்ந்து விபத்தில் பலியானார்.

சேலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனான சித்தார்த் உள்பட 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சபரிமலைக்கு சென்றுவிட்டு, தேனி மாவட்டம் வழியாக காரில் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், தேனியிலுள்ள கம்பம் பகுதிக்கு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது குடும்பத்தினர் 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடப்பதாக காவல் கண்காணிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com