தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக நேற்று வலுப்பெற்றுள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை (நவ.25) காலை தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் காற்றழுதத தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
நவ. 26, 27 ஆகிய தேதிகளில் இந்த தாழ்வுமண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும்,
மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.