இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மழை, புயல் பாதிப்புகள்: கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஆய்வு!

மழை, புயல் பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார்.

News image
மழை, புயல் பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
Updated On :30 நவம்பர் 2024, 5:25 am

DIN

மழை, புயல் பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவருகிறார்.

அங்கு இருந்தபடியே மழை முன்னேற்பாடுகள் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.

எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி மழை பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட புயல் பாதிப்புக்குள்ளான மாவட்ட ஆட்சியாளர் உடன் ஆலோசனை நடத்தியதாகவும், இன்று இரவு பலத்த மழை பெய்யும் என்பதால் போதுமான முன்னேற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். எந்த மாவட்டத்தில் இருந்தும் ஆபத்தான செய்தி வரவில்லை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.