விஜயதசமியை யொட்டி தமிழகத்தில் 52 இடங்களில் ஆர்ஆர்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விஜயதசமியை யொட்டி தமிழகத்தில் முக்கிய இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரியது.
காவல்துறை இதற்கு அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதையும் படிக்க | 'இந்த தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் சுயமரியாதை' - ராகுல் காந்தி
இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் கேட்டுள்ள 58 இடங்களுக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது.
எனினும், சில இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை என்று ஆர்எஸ்எஸ் தரப்பு, இன்றைய விசாரணையில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு முறையிட்டது.
இதற்கு பதில் அளித்த காவல்துறை, '58 இடங்களில் 52 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 இடங்களில் அனுமதி வழங்க முடியாது' என்று கூறியது.
எனினும் நீதிபதி, நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் கோரியுள்ள அனைத்து இடங்களுக்கும் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.