இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைதுஅத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,153 கன அடியாகச் சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,153 கன அடியாக சரிந்துள்ளது.

Published On :3 அக்டோபர் 2024, 8:42 am IST

கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,153 கன அடியாகச் சரிந்துள்ளது.

இரு மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 94.72 அடியிலிருந்து 94.09 அடியாகச் சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,831 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,153 கன அடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் நீர் இருப்பு 57.45 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.