இந்தியா உண்மையான மகனை இழந்துவிட்டது! ஏ.ஆர்.ரஹ்மான்

ரத்தன் டாடா மறைவுக்கு ரஹ்மான் இரங்கல் தெரிவித்தது பற்றி...

ரத்தன் டாடா மறைவுக்கு ரஹ்மான் இரங்கல் - Din

Published On :

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் உயிரிழப்புக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழும் புத்தகம்

“சில மனிதர்கள் தலைமைப் பண்பு, வெற்றி மற்றும் மரபுகளை நமக்கு கற்றுத் தரும் வாழும் புத்தகங்களாக உள்ளனர். மிக அற்புதமான, மக்கள் எளிதில் அணுகக்கூடிய மனிதர்கள், நம்மை ஊக்குவித்து வழிநடத்துகிறார்கள்.

இந்தியா தனது உண்மையான மகனையும் சாம்பியனையும் இழந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.