கோவை இண்டர்சிட்டி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள் இன்று ரத்து!

பெங்களூரு சதாப்தி உள்பட பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து!
கோவை இண்டர்சிட்டி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள் இன்று ரத்து!
PTI
Published on
Updated on
1 min read

பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, சென்னையிலிருந்து கோவை, பெங்களூருக்கு செல்லும் விரைவு ரயில்கள் உள்பட பல்வேறு ரயில்கள் புதன்கிழமை(அக்.16) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய ஜோலார்பேட்டை - சென்னை சென்ட்ரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16090) ரயில் ரத்து.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16204) ரயில் ரத்து.

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057) ரயில் ரத்து.

  • மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயில் ரத்து.

  • மாலை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089) ரயில் ரத்து

  • இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650) ரயில் ரத்து.

  • இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20601) ரயில் ரத்து.

  • இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் மெயில் (12657) ரயில் ரத்து.

  • அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய (12610) மைசூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

  • காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய (12028) பெங்களூரு - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்

  • காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய (12680) கோவை - சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

  • காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய (12608) பெங்களூரு - சென்னை சென்ட்ரல் லால்பாக் எக்ஸ்பிரஸ்

  • காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய (12243) சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்

  • பகல் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய (12609) சென்னை சென்ட்ரல்- மைசூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

  • பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய (12679) சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

  • பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய (12607) சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பாக் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

  • பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய (12244) கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்

  • மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டிய (12027) சென்னை சென்ட்ரல் - பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இணைப்பு
PDF
Train Services On 15-10-24 Due to Heavy Rainfall - Sheet1
பார்க்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com