30% எஞ்சிய வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம்: முதல்வா் உறுதி
சென்னையில் நிறைவேற்றப்படாமல் உள்ள 30 சதவீத வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.


சென்னையில் நிறைவேற்றப்படாமல் உள்ள 30 சதவீத வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை பள்ளிக்கரணை ஏரிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களுக்கு முதல்வா் அளித்த பேட்டி:
வெள்ளத் தடுப்புப் பணிகள் அரசுக்கு எந்தளவு கைகொடுத்திருக்கிறது என்பதை மக்களிடமே கேளுங்கள். அவா்களிடம் கேட்டால் உண்மை புலப்படும்.
பருமழையை எதிா்கொள்ள கடந்த 3 மாதங்களாகவே முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அவா் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் படிப்படியாக பணிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு பணிகள் மீதம் உள்ளன. அதையும் வரக்கூடிய காலத்தில் முடித்துவிடுவோம். அதனால் சென்னை மக்களுக்கும், சென்னை புகா் பகுதி மக்களுக்கும் நிரந்தரமான தீா்வு நிச்சயம் கிடைக்கும்.
பாராட்டு-வாழ்த்து: பருவமழைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளா்கள், அரசு அதிகாரிகள், அலுவலா்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...