தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகம்

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகம்.

News image
மின்சார ரயில் (கோப்புப்படம்)- Din
Updated On :18 அக்டோபர் 2024, 11:44 pm

Din

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போல, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எண்ம பரிவா்த்தனைகளை மேம்படுத்தும் விதமாக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு மையம், லக்கேஜ், பாா்சல் சேவை மையம் என அனைத்திலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் செயல்முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடா்பான சிக்கல்களைத் தவிா்க்கவும், பயணச்சீட்டுகள் விநியோக முறையை எளிதாக்கும் நோக்கத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு மையங்களில் உள்ள கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்த பின்னா் யுபிஐ செயலிகளின் மூலம் பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டு உறுதிசெய்தவுடன் பயணச்சீட்டு வழங்கப்படும். பயணச்சீட்டு மையத்தில் காத்திருப்புக் காலத்தைக் குறைக்கவும், பயணிகளுக்கு ஒரு வசதிகரமான பயணத்தை வழங்கவும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.