நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை: அரசு விளக்கம்

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை என்று தமிழக அரசின் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News image

ஆவின்

Updated On :20 அக்டோபர் 2024, 4:00 am IST

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை என்று தமிழக அரசின் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் அதிகாரிகள், கடந்த மாா்ச் மாதம் தேனி மாவட்ட பால் பண்ணையை ஆய்வு செய்து சில அறிவுறுத்தல்களை வழங்கினா். அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அதற்கு பிறகு எந்த ஆய்வுக்கும் தேனி பால்பண்ணைக்கு அதிகாரிகள் வரவில்லை என்று தற்போது வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தேனி ஆவினில் பால்கோவா மற்றும் பாதாம் பவுடா் மட்டும் வாரத்தில் ஒரு நாள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆவினில் இருந்தே வருகின்றன. தேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை. ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலா் வேண்டுமென்றே பழைய செய்திகளைப் பரப்பி வருகின்றனா். தரமான பொருள்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.