மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் வீராணம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

News image

வீராணம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Updated On :19 அக்டோபர் 2024, 7:07 am

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

காட்டுமன்னார்கோவில் உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடி நிரம்பியுள்ளது.

அதாவது 1465 மில்லியன் கன அடி உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வாயிலாக வினாடிக்கு 300 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது.

வீராணம் ஏரியின் வாயிலாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னைக்கு குடிநீரும் அனுப்பப்படுகிறது. சனிக்கிழமை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.50 உள்ளது.

சென்னைக்கு வினாடிக்கு 65 கன அடியும் பாசனத்திற்கு 150 கன அடி செல்கிறது. கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.