லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News image
பிரேமலதா விஜயகாந்த்.
Updated On :21 அக்டோபர் 2024, 7:34 am

DIN

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆம்பூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மழை வெள்ளம் ஒருநாள்தான் வந்தது. அந்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. அதை சரிசெய்ய வேண்டிய அரசு அதை விடுத்து, மீனவர்களையும், படகுகளையும் வாடகைக்கு அமர்த்துகின்றனர். தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. மக்கள் விடுமுறையில் ஊருக்கு சென்றுவர போதிய பேருந்துகள் தமிழக அரசிடம் இல்லை. அதற்காக தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கின்ற நிலை உள்ளது. வாடகைக்கு எடுத்து நடக்கும் அளவுக்கு தமிழக அரசின் நிலை உள்ளது.

மற்றவர்களை நம்பி தான் அரசு இருக்கிறது என்றால் அந்த அரசு தேவையில்லை என்றுதானே அர்த்தம். அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் அரசை வாடகை அரசாகதான் பார்க்க வேண்டியுள்ளது. பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய எண்ணிக்கை பேருந்துகள் இல்லை. இருக்கின்ற பேருந்துகளே மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருகின்றன.

ஒரு நாள் மழைக்கே சென்னையின் நிலை இவ்வாறு இருக்கும்போது, டிசம்பர் மாதத்தில் பெருமழை வரப்போகிறது. அப்போது என்ன நிலை ஏற்படும் என்பது தெரியவில்லை. ஒரு நாள் மழை வெள்ளத்தை வடிய செய்துவிட்டு அதையே சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். வரவிருக்கும் பெருமழைக்கு இப்போதே திட்டமிட வேண்டும். சரியான நிரந்த தீர்வு காண வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச் சாராயம், டாஸ்மாக், வேலையின்மை, நெசவுத் தொழில் படுபாதாளத்தில் உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார். ஆனால் நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு தூர்தர்ஷன் மன்னிப்பு கோரிவிட்டது. அதோடு பிரச்னை முடிந்து விட்டது. திமுகவினர் அதை பெரிதுபடுத்தக் கூடாது. ஆளுநரை இகழ்ந்து பேசி வருகின்றனர்.

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது. மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள், தோல் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரப்படுவதை தடுக்காமல், வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம் என்று கூறிக் கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளதையும், நலிவடைந்து வருவதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் இந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு தமிழக அரசு நல்லது செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தார். மக்கள் புரிந்து கொள்ளவில்லை. தேமுதிகாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பார். இப்போதும் காலம் உள்ளது. வருகின்ற 2026-ல் தேமுதிகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயமாக இந்த அவலநிலை மாறி மக்களாட்சியை கொடுப்போம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.