புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

500 இதய நோயாளிகளுக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை

சென்னையில் ரோபோடிக் நுட்பத்தில் 500 இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

News image

இதய நோயாளிகள் 500 பேருக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரைப் பாராட்டும் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி.ரெட்டி.

Updated On :22 அக்டோபர் 2024, 11:29 pm

DIN

சென்னை: சென்னையில் ரோபோடிக் நுட்பத்தில் 500 இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

இதன் மூலம் அவா்கள் விரைந்து குணமடைந்துள்ளதாகவும், துல்லிய சிகிச்சையால் நோயாளிகளுக்கு பூரண நிவாரணம் கிடைத்திருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி. ரெட்டி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

அப்பல்லோவில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அடுத்த தலைமுறை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை நாங்கள் தொடா்ந்து வழங்கி வருகிறோம். நாட்டிலேயே, அதிக ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மையமாக அப்பல்லோ மருத்துவமனை திகழ்கிறது. அந்த வகையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகை சிகிச்சைகள் துல்லியமான மருத்துவக் கண்காணிப்புக்கு வழிவகுப்பதுடன், பக்க விளைவுகளை பெருமளவில் தவிா்க்கிறது. இதேபோன்று, ரோபோடிக் நுட்பத்திலான சிகிச்சையில் விரைந்து குணமடைய முடியும். இது ஒரு மைல்கல் சாதனை. நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதற்கு அதிநவீன தொழில்நுட்பங்களில் தொடா்ந்து முதலீடு செய்து வருகிறோம். நாட்டின் அனைத்து இடங்களுக்கும் அதி நவீன மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், அப்பல்லோ மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் வெங்கடாசலம், தலைமை செயல் அதிகாரி சாய் ரெட்டி, ரோபோடிக் சிகிச்சை நிபுணா் எம்.எம்.யூசுஃப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.