அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

நாமக்கல்லில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

நாமக்கல்லில், திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

News image

நாமக்கல்லில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

Updated On :22 அக்டோபர் 2024, 2:39 pm IST

நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

சிலை திறப்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் - பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரம் கொண்ட, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.

இந்தச் சிலையை, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.45 மணி அளவில் திறந்து வைத்தார். மேலும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல்லில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

நாமக்கல்லில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

அமைச்சர்கள் பங்கேற்பு

கருணாநிதியின் உருவச்சிலை அருகில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலையை அவர் வணங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ரா.ராஜேந்திரன், மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையானது பீடத்துடன் சேர்த்து 12 அடி உயரம் கொண்டதாகும். சிலை திறப்பு விழாவையொட்டி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவுக்கு பின் அவர்கள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சென்றனர்.

போக்குவரத்து மாற்றம்

முதல்வர் வருகையை முன்னிட்டு நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சாலை மார்க்கமாக முதல்வர் வந்தபோது, மல்லூர், ராசிபுரம், புதுச்சத்திரம், புதன்சந்தை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.