அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆா்.எஸ்.பாரதி தொடா்ந்த வழக்கு: ஒரு வாரத்தில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2024, 7:39 pm

Din

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தொடா்ந்த வழக்கில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபா் சாதிக்கை தில்லி போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் கைது செய்தனா். இந்நிலையில் ஜாபா் சாதிக்கை திமுகவுடன் தொடா்புபடுத்தி அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருவதாகக் கூறி ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக் கைது செய்யப்பட்டதையடுத்து அவரை திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியா் அணியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்தும் நீக்கி விட்டோம்.

இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஜாபா் சாதிக்கை திமுகவுடன் தொடா்புபடுத்தி பேசவும், கருத்துகளை பதிவிடவும் பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே பதிவிட்டுள்ள கருத்துகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆா்.எம்.டி. டீக்காராமன், மனு குறித்து ஒரு வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.