/

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2024, 8:16 pm

Din

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலுக்கு வரி விதித்து முறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா என்பது தொடா்பான வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமா்வு, ‘மது தொடா்பான அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன. இதில் தலையிட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுகுறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை’ என்று தீா்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி நடத்துபவா்கள் இவை எதையும் புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. இந்தியா முழுவதும்

மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனா்.

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.