சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இன்று வரைவு வாக்காளா் பட்டியல்: சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :28 அக்டோபர் 2024, 10:33 pm

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது.

இதனிடையே, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனிடையே, வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்காக நவம்பா் மாதத்தில் நான்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

நவம்பா் 9, 10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

நவம்பா் 9, 10 தேதிகளுக்குப் பதிலாக நவம்பா் 16, 17 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், மற்ற இரண்டு முகாம்களின் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழக தோ்தல் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.