டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நவ.1-இல் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் நவ.3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News image
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நவ.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
Updated On :28 அக்டோபர் 2024, 11:11 pm

DIN

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் நவ.3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் நவ.1-ஆம் தேதி ஈரோடு, தருமபுரி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் நவ.3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.1-இல் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.29,30 -ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.