மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி: மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணிநீக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

News image
தாக்கும் சிசிடிவி காட்சி
Updated On :28 அக்டோபர் 2024, 11:40 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பாகலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியின்போது, உடற்கல்வி ஆசிரியரின் கைக்கடிகாரம் திருடப்பட்டதாக எழுந்த புகாரில் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்த போது, ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், போட்டியை நடத்திய தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரத்தை ஒரு பள்ளி மாணவி திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவியின் பள்ளியைச் சேர்ந்த பயிற்சியாளர், புதிய கடிகாரத்தை வாங்கிக்கொடுத்தும் சமாதானம் அடையாத உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளரை கடுமையாக திட்டியும், மாணவியை கடுமையாக தாக்கியும் உள்ளார். ஆசிரியர், மாணவியை அடித்தபோது, அவர் நிலைத்தடுமாறி கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களும் மாணவியுடன் வந்து கைக்கடிகாரத்தைத் திருப்பிக்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், மாணவி தாக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைத்தளத்தில் பரவியதன் மூலம், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வந்த நிலையில், உடற்கல்வி ஆசிரியர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.