திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத் துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத் துறை டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை இதுபோன்று தவறாக பயன்படுத்துகின்றனரா என தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் எச்சரித்தது.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 6:49 pm

Din

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத் துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை இதுபோன்று தவறாக பயன்படுத்துகின்றனரா என தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் எச்சரித்தது.

வேலூா் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவரை சிறைத் துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்ாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாகவும், அவரது தாய் கலாவதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டிருந்தது. தொடா்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமா்வு தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதிகள், டிஐஜிக்கு எதிரான விசாரணையைத் தொடர சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டனா். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் சம்பந்தப்பட்ட டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனா். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி துறை ரீதியான நடவடிக்கையை தாமதிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

பணியில் ஈடுபடுத்தக் கூடாது... மேலும், சிறைக் கைதிகள் இதுபோன்று வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறாா்களா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறைத் துறை டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வீட்டுப்பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல ஆா்டா்லியாக காவல் துறையினரையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளனா்.