/

ரூ. 59,000-ஐ தொட்ட தங்கம் விலை!! புதிய உச்சம்!

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது பற்றி...

News image
தங்கம் விலை (கோப்புப்படம்)- din
Updated On :29 அக்டோபர் 2024, 4:44 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 59,000-ஐ தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் ரூ. 58,880-க்கு விற்பனை செய்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று, சவரனுக்கு ரூ. 260 வரை குறைந்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இரு நாள்கள் இருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 59,000-க்கும், ஒரு கிராம் ரூ. 7,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,040-க்கும், ஒரு கிராம் ரூ. 7,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

இந்த நிலையில், வெள்ளி விலையும் செவ்வாய்க்கிழமை காலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ. 1,08,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த அக். 23-ஆம் தேதி வெள்ளியின் விலை ரூ. 112 என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.