மலைப்பாதையில் அரிசிலோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி மலைப்பாதையில் பிரேக் பழுதாகி அரிசிலோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் தும்குர் பகுதியில் இருந்து சென்னைக்கு 25 டன் கொண்ட அரிசி மூட்டை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டது.
லாரியை விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி (34)என்பவர் ஓட்டி வந்தார். இதனிடையே லாரி தமிழக - ஆந்திர எல்லையான பத்தல பள்ளி மலைப்பாதையில் வரும் பொழுது பிரேக் பழுதாகி இடதுபுறம் உள்ள பள்ளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் ஆனந்த ஜோதி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் கண்டெய்னர் லாரியில் ஏற்றி வந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறிக் கிடந்தன
கண்டெய்னர் லாரி மலைப்பாதை சாலையில் கவிழ்ந்ததால் தமிழகத்தில் இருந்து ஆந்திரம், கர்நாடகம் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.