எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மகா விஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

சர்ச்சை பேச்சு தொடர்பாக கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

News image

மகா விஷ்ணு(கோப்புப்படம்)

Updated On :7 செப்டம்பர் 2024, 9:06 pm IST

சர்ச்சை பேச்சு தொடர்பாக கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து மகா விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா், மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளுக்கு அவா்கள் முற்பிறப்பில் செய்த பாவம்தான் காரணம் என்று அவா் பேசியது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது பேச்சைக் குறுக்கீடு செய்த பாா்வை மாற்றுத்திறனாளி தமிழாசிரியா் சங்கரிடம் வாக்குவாதம் செய்து மகா விஷ்ணு பேசியதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அவா் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவா் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக காவல் துறை உயா் அதிகாரிகள், சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை செய்து வந்தனர்.

சட்ட வல்லுநா்களின் அறிவுரையின்படி மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறையைச் சோ்ந்த ஒரு உயா் அதிகாரி தெரிவித்தாா். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனுவாசன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

அவர் மீது மீது 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து மகா விஷ்ணுவை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியரிடம் மரியாதைக் குறைவாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இரண்டு அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.