நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மணிப்பூர் வன்முறை: ஆளுநரை சந்தித்தார் முதல்வர் பிரேன் சிங்

மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், ஆளுநர் எல். ஆச்சார்யாவை முதல்வர் பிரேன் சிங் சனிக்கிழமை மாலை சந்தித்தார்.

News image

ஆளுநர் மாளிகையில் முதல்வர் பிரேன் சிங் வாகனம்.

Updated On :7 செப்டம்பர் 2024, 8:31 pm IST

மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், ஆளுநர் ஆச்சார்யாவை முதல்வர் பிரேன் சிங் சனிக்கிழமை மாலை சந்தித்தார்.

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் மீண்டும் அரங்கேறி வருகின்றன. ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று நடந்த வன்முறையில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில், நான்கு குக்கி சமூகத்தைச் சேர்ந்தவரும், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து குக்கி, மெய்தி இனக் குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் வன்முறை காரணமாக 7 பேர் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், ஆளுநர் ஆச்சார்யாவை முதல்வர் பிரேன் சிங் சனிக்கிழமை மாலை சந்தித்தார்.

முன்னதாக மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் அவசரக் கூட்டம் மாநிலத் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது. 25 எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், ஆயுதமேந்திய கும்பல்களின் தொடர் தாக்குதல்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் ஆச்சார்யாவை சந்திக்க முதல்வர் பிரேன் சிங் விரைந்தார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.