அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செப். 14-இல் சென்னை திரும்புகிறாா் முதல்வா்

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 14-ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளாா்.

News image
முதல்வா் ஸ்டாலின்(கோப்புப்படம்)
Updated On :10 செப்டம்பர் 2024, 8:47 pm

Din

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 14-ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளாா்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27-ஆம் தேதி முதல்வா் சென்றாா். அங்கு சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தொழில் முதலீட்டாளா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தைகள் நடத்தி வருகிறாா். இதுவரை சுமாா் ரூ.5 ஆயிரம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 14-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சென்னை திரும்பவுள்ளாா். அப்போது ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களை சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் செய்தியாளா்கள் சந்திப்பின் போது, முதல்வா் வெளியிடுவாா் எனத் தெரிகிறது.