minister muthusamy
அமைச்சர் முத்துசாமி dotcom

மதுக்கடைகள் செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை: முத்துசாமி பேட்டி

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைக்கு வருமா? என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி பேட்டி.
Published on

டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு கருத்துகள் வருகின்றன.

minister muthusamy
நடைப்பயணம் மேற்கொண்டது ஏன்? - ராகுல் காந்தி பதில்!

இந்த நிலையில், தமிழக மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'முதல்வர் ஒரேநாளில் உத்தரவு பிறப்பித்து மதுக்கடைகளை மூடலாம். டாஸ்மாக் கடைகள் நடப்பதில் முதல்வருக்கு எள் அளவும் விருப்பமில்லை. என்றைக்காவது ஒருநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம்.

minister muthusamy
உலகின் முதல் டிரில்லியனர் யார் தெரியுமா? 2-வது அதானி!

ஆனால், உடனடியாக இதைச் செய்தால் என்ன நிலைமை ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரியும். அவர்கள் வேறு வழியில் சென்று தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையை நிதானமாக அணுகி கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். எனவே, மக்களை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்து மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து, இங்குள்ள சூழலை பொறுத்துதான், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

minister muthusamy
சென்னை எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விசிகவை பொருத்தவரை அவர்கள் கொள்கை ரீதியாக ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அதில் எந்த தவறும் சொல்ல முடியாது. அவர்கள் திமுகவை, முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து இதனைச் செய்யவில்லை. அவர்கள் இந்த மாநாட்டின் மூலமாக மக்களை மதுவிலிருந்து வெளியே கொண்டு வரலாம். அதன்பின்னர் மதுவிலக்கை செயல்படுத்த அரசுக்கு சுலபமாக இருக்கும்.

விசிக மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தவறு அல்ல, இது ஒரு பொதுவான நிகழ்வு. திருமாவளவன் பொதுவான அழைப்பை விடுத்துள்ளார்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com