முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி: பிரேமலதா குற்றச்சாட்டு
முதல்வா் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விமா்சித்துள்ளாா்.


முதல்வா் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விமா்சித்துள்ளாா்.
கட்சியின் 20-ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விஜயகாந்த் சிலை மற்றும் ‘கேப்டன் ஆலயம்’ என்ற பெயரிலான பலகையைத் திறந்து வைத்தாா். மேலும், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு பிரேமலதா அளித்த பேட்டி:
முதல்வா் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்விலேயே முடிந்துள்ளது. முதலீடுகளை ஈா்த்தது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கட்சியின் நிறுவனா் விஜயகாந்த் இல்லாமல் ஆண்டு விழாவில் கொடியேற்றி இருப்பது வருத்தமாக உள்ளது. கோவை ஹோட்டல் உரிமையாளா் யதாா்த்தமாகப் பேசியதும் மன்னிப்பு கேட்டதும் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதை திமுகவும், காங்கிரஸ் கட்சிகளும் சாதகமாக்கியுள்ளன என்று தெரிவித்தாா்.
இதனிடையே, கட்சியினருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், கட்சியின் நிறுவனா் விஜயகாந்தின் கனவு மற்றும் லட்சியத்தை அனைவரும் ஒன்று சோ்ந்து வென்றெடுப்போம் என்று தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...