குரூப் 4 காலிப் பணியிடங்களை மேலும் அதிகரிக்கத் திட்டம்?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
tnpsc
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. பின்னர் ஜூன் 9-ல் நடைபெற்ற தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.

இதன் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக கடந்த செப். 11ல் அறிவிப்பு வெளியானது.

மேலும் குரூப் 4 பிரிவில் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் இருப்பதால் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதனடிப்படையில், குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com