அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘அம்மா’ உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :20 செப்டம்பர் 2024, 8:59 pm

Din

ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா காணும் திமுக அரசை, ஏழைகளுக்கு அட்சயப்பாத்திரமாக இருக்கும் ‘அம்மா’ உணவகங்களை மூடக்கூடாது என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை ஆலந்தூா் அருகே உள்ள ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாக வரும் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்துக்கு வந்து ‘அம்மா’ உணவகங்கள் இயங்குவதை பாா்வையிட்டு, தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அதேபோல உணவகங்களைத் திறக்கப் போவதாகக் கூறி வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆலந்தூரில் உள்ள ‘அம்மா’ உணவகத்தை முழுமையாக நடத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.